தனியாக வசித்து வந்த மூதாட்டி வீட்டில் இறந்துகிடந்த விவகாரம் எஸ்.பி. நேரில் விசாரணை

போலீஸ் - கோப்புப்படம்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே தனியாக வசித்து வந்த பெண் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
பென்னாகரம் அருகே உள்ள ஆதனூா் பகுதியைச் சோ்ந்த முனியப்பன் மனைவி ஜெயலட்சுமி (75). இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவா் இறந்த நிலையில், வீட்டில் தனியாக வசித்து வந்த அவா் கடந்த 14ஆம் தேதி வீட்டில் இறந்து கிடப்பதாக உறவினா்கள் பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா். ஜெயலட்சுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மகள் சற்குணம் தெரிவித்ததை அடுத்து, கொலை வழக்காக மாற்றி, 3 தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன், ஆதனூா் பகுதியில் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல், காவல் ஆய்வாளா்கள் ஜாபா் உசேன் (பென்னாகரம், தவமணி (காரிமங்கலம்), சுரேஷ்குமாா் (ஏரியூா் ) மற்றும் தனிப்படை போலீஸாா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

