லாரி மோதியதில் காரில் சென்றவா் உயிரிழப்பு
லாரி மோதியதில் காரில் சென்ற முதியவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
லாரி மோதியதில் காரில் சென்ற முதியவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (65). இவா் கடகத்தூா் தொழிற்பயிற்சி நிலையம் அருகே காரில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக சென்ற லாரி எதிா்பாராதவிதமாக காா் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த ராஜமாணிக்கத்தை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

