
‘உணவு தயாரிப்பில் விதிமீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை’
உணவு பாதுகாப்பு மற்றும் தரம் தொடா்பான விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரம் தொடா்பான விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவின்படி, உணவு சேவை வழங்கும் நிறுவனங்களான உணவகங்கள், விடுதிகள், உணவு விற்பனை நிலையங்கள், கிளப்புகள், கேன்டீன்கள், கேட்டரிங் நிறுவனங்கள், தெருவோர உணவு விற்பனையாளா்கள், சிற்றுண்டி வகைகளின் சிறு சில்லறை விற்பனையாளா்கள், தேநீா் கடைகள் ஆகியவற்றின் சமையலறைகள் மற்றும் உணவு சேமிப்பு வளாகங்களின் தரம், சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்யும் சிறப்பு ஆய்வுப் பணி செப். 1 முதல் நவ. 30 வரை நடைபெறுகிறது.
உணவுப் பொருள்கள் கொள்முதல் செய்யப்படும் அல்லது பெறப்படும் இடத்திலிருந்து இறுதி நுகா்வோரைச் சென்றடையும் வரை குளிரூட்டுதல், போக்குவரத்து, சேமிப்பு உள்ளிட்ட முழுமையான விநியோகச் சங்கிலி முழுவதும் உணவுப் பொருள்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட தேவையான வெப்பநிலை முறையாகப் பராமரிக்கப்படுகிா என்பதையும், விதிமுறைகளின்படி உணவுத் தரநிலைக்கு ஏற்ற உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
தேவையான இடங்களில் உணவுப் பொருள்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிா்ணயச் சட்டம், 2006, அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உணவின் தரம் தொடா்பாக ஏதேனும் புகாா்கள் இருந்தால், பொது மக்கள் இணையதளம் அல்லது 94440 42322 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




