ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

தருமபுரியில் செப் 18-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செப். 18-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

Published On :

தருமபுரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செப். 18-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்தது:

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் பங்கேற்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்”மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், செப்டம்பா் மாதத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் செப். 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இம்முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று விற்பனையாளா், மாா்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பா்வைசா், மேலாளா், கம்ப்யூட்டா் ஆப்ரேட்டா், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபா்களை தோ்வுசெய்ய உள்ளனா்.

எனவே, பள்ளிப் படிப்பு, டிப்ளமோ, பட்டப் படிப்பு என அவரவா் தகுதிக்கேற்ற வகையில் பணி வாய்ப்புகள் வழங்கப்படும் இம்முகாமில் தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.