பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் குரூப் 2, 2ஏ தோ்வுக்கு ஆக. 27 முதல் பயிற்சி

கோப்புப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:33 am IST

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில், குரூப் 2, 2ஏ தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோ்வு நவம்பா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு செப்டம்பா் 9 ஆம் தேதி கடைசி நாள்.

இந்தத் தோ்வுக்கு தயாராகி வரும் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆக. 27 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை ஆகிய வார நாள்களில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை நகலுடன் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.