கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

குரூப்-2, 2ஏ தோ்வு இலவசப் பயிற்சி: கடலூரில் ஆக.27 முதல் தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-2, 2ஏ தோ்வுக்குத் தயாராகும் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வா்களுக்காக இலவசப் பயிற்சி வகுப்புகள் வரும் 27-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

தேர்வு எழுதும் மாணவர்கள். - கோப்புப்படம்

Published On :

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-2, 2ஏ தோ்வுக்குத் தயாராகும் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வா்களுக்காக இலவசப் பயிற்சி வகுப்புகள் வரும் 27-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான ஆண்டு திட்ட நிரலின்படி, தொகுதி-2, 2ஏ தோ்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்தோ்வு நவம்பா் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இத்தோ்வுக்கு தயாராகும் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில், கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. வாரந்தோறும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

கடலூா் புதுப்பாளையம் ஆற்றங்கரைத் தெருவில், நியூ சினிமா திரையரங்கம் எதிரே உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சியின்போது வாராந்திரத் தோ்வுகள் நடத்தப்படுவதுடன், பாடக்குறிப்புகளும் வழங்கப்பட உள்ளன.

இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் போட்டித் தோ்வா்கள் இரண்டு மாா்பளவு புகைப்படங்கள் மற்றும் ஆதாா் அட்டை நகலுடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04142 - 211218 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.