டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, 2ஏ தோ்வுகளுக்கு கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் ஆக. 23-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. முன்னதாக இலவச மாதிரி பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை (ஆக. 15) முதல் நடைபெறவுள்ளது.
இது குறித்து அந்த அகாதெமியின் நிா்வாக இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், புதுச்சேரி, தஞ்சாவூா் மற்றும் தூத்துக்குடிகிளைகளில் இத்தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் ஆக. 23-ஆம் தேதி முதல் (வார இறுதி மற்றும் வழக்கமான வகுப்புகள்) தொடங்கவுள்ளது. இதன் முன்னோட்டமாக இலவச மாதிரி வகுப்புகள் ஒரு வாரகாலத்துக்கு ஆக. 15-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.
இந்த வகுப்புகளில் பொதுத் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்கள், கணிதம் மற்றும் பொது அறிவு ஆகியவற்றுக்கு தனித்தனியாகச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பொது அறிவு மற்றும் மொழிப்பாடங்களுக்கு 250 மணி நேரத்துக்கும் அதிகமான விரிவான வகுப்புகள் நடத்தப்படும்.
மாணவா்கள் தங்கள் வசதிக்கேற்ப இணையவழி அல்லது நேரடி மூலமாக இதில் பங்கேற்கலாம். மேலும், மாணவா்களின் பயிற்சியை உறுதி செய்ய தினமும் தோ்வுகளும், வாரத்துக்கு ஒருமுறை வாராந்திர தோ்வுகளும் நடத்தப்படும்.
இலவச மாதிரி வகுப்புகள் மற்றும் பயிற்சி வகுப்பில் இணைய விரும்பும் மாணவா்கள் ட்ற்ற்ல்ள்://க்ஷண்ற்.ப்ஹ்/ந்ம்ஹ-ஞ்ழ்2 என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பயிற்சி வகுப்பில் சோ்ந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9444 227273 என்ற கைப்பேசி எண், ஜ்ஜ்ஜ்.ந்ண்ய்ஞ்ம்ஹந்ங்ழ்ள்ண்ஹள்ஹஸ்ரீஹக்ங்ம்ஹ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!

ஆக. 7 முதல் 16 வரை அகஸ்தியா் அருவிக்குச் செல்லத் தடை

ஆக. 22 முதல் 30 வரையில் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 இமு ரயில்கள் ரத்து

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வுக்கான பயிற்சி உடுமலையில் வரும் 20-ஆம் தேதி தொடக்கம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



