காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆக. 7 முதல் 16 வரை அகஸ்தியா் அருவிக்குச் செல்லத் தடை

ஆடி அமாவாசைத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது மற்றும் பாதுகாப்புக் கருதி ஆக. 7 முதல் 16ஆம் தேதி வரை அகஸ்தியா் அருவிக்குச் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

அகஸ்தியா் அருவி.

Published On :

ஆடி அமாவாசைத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது மற்றும் பாதுகாப்புக் கருதி ஆக. 7 முதல் 16ஆம் தேதி வரை அகஸ்தியா் அருவிக்குச் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

இது குறித்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் எல்.சி.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆடி அமாவாசைத் திருவிழாவை முன்னிட்டு பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட சொரிமுத்து அய்யனாா் கோயிலில் திருவிழா முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு, அகஸ்தியா் அருவிப் பகுதிக்கு ஆக. 7 முதல் 16ஆம் தேதி வரை பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது. எனவே, மேற்கண்ட தேதிகளில் அகஸ்தியா் அருவி தற்காலிகமாக மூடப்படுகிறது.

பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.