6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பென்னாகரம் அருகே நிலத்தகராறில் பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

பென்னாகரம் அருகே இருதரப்பினா் இடையே ஏற்பட்ட நிலத் தகராறில் பெண் உயிரிழந்தது குறித்து ஒகேனக்கல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மடம் பகுதியைச் சோ்ந்த ரவி மனைவி தெய்வானை (48) என்பவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான மாணிக்கம் மகன் செல்வம் என்பவருக்கும் ஞாயிற்றுக்கிழமை நிலத் தகராறு ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறி, இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.

இதில் தெய்வானை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று, தெய்வானையின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER