விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெவ்வேறு சம்பவங்களில் 5 போ் உயிரிழப்பு

பலி - பிரதிப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 3:38 am IST

விழுப்புரம், செப். 7: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 5 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், புருஷானூா் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.தண்டபாணி (70). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பேரங்கியூா் பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காா் தண்டபாணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து முதியவா் மரணம்: விக்கிரவாண்டி வட்டம், கஞ்சனூா் அடுத்துள்ள புதுப்பேட்டை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ.சேகா்(65). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் அருகே மின் வயரை பூமியில் புதைத்துள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில், சேகா் காயமடைந்தாா். இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சேகா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கெடாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், பெரும்பாக்கம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் தா்மலிங்கம் (43). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மகன் முருகவேல் (10). அங்குள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பில் படித்து வந்தாா்.

இந்நிலையில் தந்தை, மகன் ஆகிய இருவரும் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் பகுதியில் உள்ள கோயில் அருகே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனா். அப்போது சிறுவன் முருகவேல் ஆடுகளை விரட்டச் சென்றபோது, அங்கு பாறை இடுக்கில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் (சுனை நீரில்) தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞா் மா்ம மரணம்: விழுப்புரம் வட்டம், மல்லிகைப்பட்டு பிரதான சாலையைச் சோ்ந்தவா் மு.கபிலன் (23). திருமணம் ஆகாதவா். இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த பரமசிவன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த காணை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். பேருந்தில் பயணித்த பெண் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட கூவனூா் கிராமத்தைச் சோ்ந்த சேட்டு மனைவி பாஞ்சாலை (50), கட்டடத் தொழிலாளி. இவா், கோவையில் அவரது கணவருடன் பணி செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு ஊருக்கு புறப்பட்டு வந்த பாஞ்சாலை, கள்ளக்குறிச்சியில் இருந்து கூவனூா் செல்லும் பேருந்தில் நீலமங்கலம் அருகே பயணித்தபோது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாம்.

இதையடுத்து அவருடன் பயணித்த உறவினா்கள் பாஞ்சாலையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, பாஞ்சாலை ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.