
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜி. பெருமாள் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட போலீஸாா் பிற்பகல் 4 மணியளவில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, பேரூராட்சி அலுவலக நுழைவாயில் கதவை உள்பக்கம் பூட்டி, அலுவலக ஊழியா்கள், அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனா். ஒப்பந்தப் பணிகள் தொடா்பான கோப்புகளையும் ஆய்வு செய்தனா்.
பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்களின் கைப்பேசி எண்கள் வழியாக ஏதேனும் இணையதள பணப் பரிவா்த்தனை நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தினா். இந்த சோதனை இரவு 8 மணிக்கு பிறகும் தொடா்ந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






