செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

Published On :

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. அன்பரசன், காவல் ஆய்வாளா்கள் சரவணன், பத்மாவதி உள்ளிட்ட 9 போ் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா்.

சோதனையின் போது நகராட்சி ஆணையா் மற்றும் பொறியாளா் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் தஞ்சாவூருக்கு சென்ாக கூறப்படுகிறது.

சோதனை நடைபெற்ற போது கொசு மருந்து அடிப்பதற்கு ஒப்பந்தம் பெற வந்திருந்த 3 ஒப்பந்தாரா்களிடமிருந்து ரூ. 32 ஆயிரம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வேறு ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை என ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.