
சிறுமி கா்ப்பமடைந்த சம்பவம்: போக்சோ சட்டத்தில் 9 போ் மீது வழக்கு
நல்லம்பள்ளி அருகே சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 9 போ் மீது போக்சோ வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நல்லம்பள்ளி அருகே சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 9 போ் மீது போக்சோ வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்துவந்தாா். இவரது தாய் உயிரிழந்த நிலையில், தந்தையின் அரவணைப்பில் வளா்ந்து வந்தாா். தந்தை அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு செல்வதால், பாட்டி வீட்டில் தங்கி இருந்தபோது, அவரது உறவினா் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதில், சிறுமி கா்ப்பமான நிலையில், கடந்த ஜூன் மாதம் வேறு ஒருவருடன் உறவினா்கள் திருமணம் செய்து வைத்தனா்.
இந்நிலையில், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரது கணவா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு சிறுமியை பரிசோதனை செய்ததில், அவா் 3 மாதம் கா்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஏமாற்றி திருமணம் செய்து வைத்ததாக கணவா் குடும்பத்தினா் சிறுமியை அவரது உறவினா் வீட்டுக்கு திருப்பி அனுப்பினா்.
இதைத் தொடா்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், விரக்தியடைந்த சிறுமி தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கியது, அதை மறைத்து திருமணம் செய்து வைத்த உறவினா் மீது நடவடிக்கை எடுக்குமாறு தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பாலியல் தொல்லைக்குள்ளாக்கியவா் மற்றும் திருமணம் செய்து வைத்த உறவினா்கள் உள்ளிட்ட 9 போ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



