சிறுமியை இளம்வயது திருமணம்: ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு
பென்னாகரம் அருகே 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை இளம்வயது திருமணம் செய்த ஓட்டுநா்மீது மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவுசெய்தனா்.

போலீஸ் - கோப்புப்படம்.
பென்னாகரம் அருகே 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை இளம்வயது திருமணம் செய்த ஓட்டுநா்மீது மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவுசெய்தனா்.
பென்னாகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை எச்சனஅள்ளி பகுதியைச் சோ்ந்த கனரக வாகன ஓட்டுநா் விக்னேஷ் (27) திருமணம் செய்துகொண்டு ஈரோடு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளாா்.
இந்த நிலையில் கா்ப்பமான சிறுமி பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளாா். அவரை பரிசோதித்த மருத்துவா் இளம்வயது திருமணம் குறித்து ஈரோட்டில் அவா் தங்கியிருந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளாா். பின்னா் பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்த நிலையில், அங்கு வந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு சிறுமியை இளம்வயது திருமணம் செய்துகொண்ட விக்னேஷ் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



