விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வாகனம் மோதியதில் முதியவர் சாவு

அரூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ராமச்சந்திரன் (60) வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:36 pm

தினமணி

அரூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ராமச்சந்திரன் (60) வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

 அரூரை அடுத்த கௌôப்பாறை கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் மகன் ராமச்சந்திரன் (60). இவர் தமது சொந்த வேலையின் காரணமாக  மோட்டார் சைக்கிளில் அரூர் - சேலம் சாலையில் கோ.கூட்டு ரோடு நோக்கிச் சென்றார்.

 அப்போது சின்னாங்குப்பம் அருகே மாரியம்மன் கோயில் எனுமிடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் முதியவர் ராமச்சந்திரன் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து அவரது மகன் லட்சுமணன் (34) அளித்த புகாரின் பேரில், அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.