தாராபுரம்: கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

"அம்மா' குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் அளிப்பு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் "அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தொடக்கிவைத்தார்.

Published On :

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் "அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தொடக்கிவைத்தார்.

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த 123 தாய்மார்களுக்கு 16 வகையான பொருள்கள் அடங்கிய "அம்மா' குழந்தைகள் நல பரிசுப் பெட்டகத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்தார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.சுவாமிநாதன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) சகாயமேரி ரீட்டா, மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன், மகப்பேறு மருத்துவர் மலர்விழி, பாலக்கோடு தொகுதி சட்டப்

பேரவை உறுப்பினர் கே.பி. அன்பழகன், கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் இணையம் தலைவர் ஜி.மணிவண்ணன், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாய்மார்களுக்கு "அம்மா' குழந்தைகள் நல பரிசுப் பெட்டகத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமை வகித்தார்.

கே.அசோக்குமார் எம்பி, எம்எல்ஏ-க்கள் கே.பி.முனுசாமி, மனோரஞ்சிதம் நாகராஜ், கே.இ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்டி, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் பிரேம்குமார், முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 56 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 நகர்ப்புற மருத்துவமனைகள், 5 அரசு மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

ஒசூரில்...

ஒசூர் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வரின் தாய்,சேய் நலத் திட்டமான "அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்' வழங்கும் விழா ஒசூர் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை மருத்துவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். ஒசூர் நகர்மன்றத் தலைவர் பாலகிருஷ்ணா ரெட்டி, அதிமுக நகரச் செயலர் நாராயணன் ஆகியோர் பிரசவித்த பெண்களுக்கு "அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகங்களை' வழங்கினர். விழாவில், உள்ளாட்சி நிர்வாகிகள், செவிலியர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.