ஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

கொதிகலன் வெடித்து தொழிலாளி இறந்த வழக்கில் மேலாளர் உள்பட இருவர் கைது

ஒசூரில் உள்ள தனியார் ஆலையில் கொதிகலன் வெடித்து தொழிலாளி உயிரிழந்த வழக்கில் மேலாளர் உள்பட இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஒசூர் சிப்காட் பகுதியில் தனியார்

Published On :

ஒசூரில் உள்ள தனியார் ஆலையில் கொதிகலன் வெடித்து தொழிலாளி உயிரிழந்த வழக்கில் மேலாளர் உள்பட இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஒசூர் சிப்காட் பகுதியில் தனியார் தொழில்சாலையில் பணியாற்றி வந்த கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளி அருகே உள்ள பல்லுர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி (55) கடந்த செப். 12இல் கொதிகலன் வெடித்தில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில், உரிய முறையில் பாய்லரை பராமரிக்காத காரணத்தால் விபத்து நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாய்லர் ஆபரேட்டர் தம்புராஜ் (25), ஒசூர் அடுத்த அட்டகுறுக்கி பகுதியைச் சேர்ந்த ஆலை மேலாளர் வேடியப்பன் (40) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள அந்த தொழில்சாலை உரிமையாளர் அருள்முக சண்முகத்தைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.