லாரி மோதி மாணவிகள் காயம்; சிலை சேதம்

கிருஷ்ணகிரி அருகே தக்காளி பாரம் ஏற்றி வந்த லாரி நிலைத் தடுமாறி மோதியதில் இரு கல்லூரி மாணவிகள் படுகாயமடைந்தனர்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அருகே தக்காளி பாரம் ஏற்றி வந்த லாரி நிலைத் தடுமாறி மோதியதில் இரு கல்லூரி மாணவிகள் படுகாயமடைந்தனர். மேலும் சாலையோரம் இருந்த இந்திரா காந்தியின் சிலையும் சேதமடைந்தது.
மால்குப்பத்தைச் சேர்ந்தவர் மாணவி சோனியா (21). இவர், இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டிநாயனப்பள்ளிபேருந்து நிறுத்தத்தின் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது எதிரே ஆந்திரா மாநிலம் சித்தூரிலிருந்து தக்காளி பாரம் ஏற்றி வந்த லாரி மோதியது.
இதில் நிலைத்தடுமாறி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் சிலை மீது மோதியது. 
இந்த விபத்தில் சிலை அருகே அமர்ந்திருந்த அதே தனியார் கல்லூரியில் பயிலும் கோட்டகொல்லை கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவி முனீஸ்வரியும் (21) படுகாயமடைந்தார்.
இந்த விபத்தில் முனீஸ்வரியின் கால்கள் துண்டானது. முனீஸ்வரி,  தீவிர சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மகாராஜ கடை போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் ராமூர்த்தியை (24) கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com