ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மத்தூர் அருகே கோயில் திருவிழா ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்

போச்சம்பள்ளியை அடுத்த சாலூர் கிராமத்தில் ஸ்ரீ தேசத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:05 am

DIN

போச்சம்பள்ளியை அடுத்த சாலூர் கிராமத்தில் ஸ்ரீ தேசத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். 
போச்சம்பள்ளியை அடுத்த சாலூர் கிராமத்தில் ஸ்ரீ தேசத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. சுற்றுவட்டாரக் கிராமங்களான வாலிப்பட்டி, கண்ணுகானூர், கருப்பேரி, பெரமனூர், வேலாவள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இக்கோயில் விழாவுக்கு வந்து நேர்த்திக் கடனாக ஆடுகளைப் பலியிட்டனர். இதில் பக்தர்கள் அதிகம்பேர்
பங்கேற்றனர்.
கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி காலை 10 மணிக்குத் துவங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. ஆடுகளைப் பலியிடுவதற்காக சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து ஆடுகளைப் பலியிட்டு சாமியைத் தரிசனம் செய்தனர். இந்தக் கோயிலுக்குச் செல்ல மத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி போக்குவரத்துக் கழகத்தால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட மத்தூர், சாமல்பட்டி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.