இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

இன்று மகளிர் விளையாட்டுத் தேர்வு போட்டி

கிருஷ்ணகிரியில் இன்று,  தேசிய மகளிர் விளையாட்டு போட்டிகளுக்கான மாவட்ட வீராங்கனைகள் தேர்வுப் போட்டி நடைபெறுகிறது.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:28 am IST

கிருஷ்ணகிரியில் இன்று,  தேசிய மகளிர் விளையாட்டு போட்டிகளுக்கான மாவட்ட வீராங்கனைகள் தேர்வுப் போட்டி நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.சிவரஞ்சன், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2017 - 18-ஆம் ஆண்டுக்கான தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஏப்.5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள், 2017-ஆம் ஆண்டு, டிசம்பர் 31-ஆம் தேதியன்று 25 வயதுக்குள்பட்டவர்களாக இருக்க வேண்டும். 
இதில் பிரிவு 1-இல் கூடைப்பந்து, பளுதூக்குதல், நீச்சல் ஆகிய போட்டிகளும், பிரிவு 2-இல் மல்யுத்தம், வளைகோல்பந்து, குத்துச்சண்டை,  பிரிவு 3-இல் தடகளம், இறகுப் பந்து, மேசைப் பந்து,  பிரிவு 4-இல் கோ-கோ, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் தேர்வுப் போட்டிகள் நடைபெறும். 
மாவட்ட அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள், மாநில அளவிலான தேர்வுப் போட்டிக்கு தகுதி பெறுவர். எனவே, விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என  அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.