வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

திமுக ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர் . 

Updated On :5 ஏப்ரல் 2018, 7:27 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர் . 
உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்தக் கோரி தேன்கனிக்கோட்டையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், தளி எம்எல்ஏவுமான ஒய். பிரகாஷ் தலைமை வகித்தார்.
வேப்பனஹள்ளி தொகுதி எம்எல்ஏ முருகன் முன்னிலை வகித்தார். இதில் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், ஒசூர் நகரச் செயலாளர் என்.எஸ்.மாதேஸ்வரன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஏ. சத்யா, பொறியாளர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எல்லோரா.மணி, மாவட்டத் துணைச் செயலாளர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.