ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

கர்நாடக எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஒசூர் அருகே கர்நாடக எல்லையை முற்றுகையிடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 2:28 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஒசூர் அருகே கர்நாடக எல்லையை முற்றுகையிடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
அக்கட்சியின் மாவட்டத் தலைவர் தமிழ்மாறன் தலைமையில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன், மாவட்ட நிர்வாகி தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் மூக்கண்டபள்ளியில் இருந்து ஊர்வலமாக கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளியை நோக்கிச் சென்ற நாம் தமிழர் கட்சியினரை ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.சிலர் சாலையில்  மறியலில் ஈடுபட்டனர். 
இதையடுத்து அக் கட்சியைச் சேர்ந்த 10 பெண்கள் உள்பட 160 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால், ஒசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.