சூளகிரி அருகே ராமாபுரத்தில் விவசாய நிலங்களில் புகுந்த யானைகள், பீன்ஸ், தக்காளி தோட்டங்களை சேதப்படுத்தின.
ஒசூர் அருகே போடூர்பள்ளம் வனப்பகுதியில் குட்டியுடன் 6 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை போடூர் வனப்பகுதியில் இருந்து ராமாபுரம் பகுதிக்குச் சென்ற யானைகள், அங்கு பீன்ஸ், கத்திரி தோட்டங்களில் புகுந்து தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று அந்த யானைகளை போடூர்பள்ளம் காட்டுக்கு விரட்டினர். இந்த யானைகளை தேன்கனிக்கோட்டையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்பு திரைப்படத்தில் நடித்தது ஏன்? இந்திரன்ஸ் விளக்கம்!
ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


