மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஸ்ரீகரியாள லிங்கேஸ்வர சுவாமி கோயில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஓசூரை அடுத்த பாகலூர் அருகேயுள்ள படதேப்பள்ளி கிராமத்தில் உள்ள  பிரசித்தி பெற்ற  ஸ்ரீ கரியாள லிங்கேஸ்வர சுவாமி கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:46 am

DIN

ஓசூரை அடுத்த பாகலூர் அருகேயுள்ள படதேப்பள்ளி கிராமத்தில் உள்ள  பிரசித்தி பெற்ற  ஸ்ரீ கரியாள லிங்கேஸ்வர சுவாமி கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குரும்பர் இன மக்களின் குல தெய்வ கோயிலான இந்தக் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற திருவிழாவில்,  30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விழாவையொட்டி,  ஸ்ரீ கரியாள லிங்கேஸ்வரர்,  ஸ்ரீ லட்சுமி,  ஸ்ரீ பார்வதி உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதையடுத்து,   சிக்கம்மா,  தொட்டம்மா,  கூளிசந்திரய்யா,  கரியாள சம்பங்கி,  ராமதேவுரு, பத்ராயன், பீரே தேவுரு உள்ளிட்ட 26 சுவாமிகளின் கலசங்கள் அலங்கரிக்கப்பட்டு, 8 எருதுகளுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
இதையடுத்து,  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்களை 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது தலைகளில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் .  இந்தத் தேங்காய்களை  தொட்டபேளூர் சம்பங்கி,  ஆனேகல் முனிராஜ்  ஆகியோர் உடைத்தனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காகேனஹள்ளி கனகபீடா மடாதிபதி ஸ்ரீ ஈஸ்வரானந்தா பூரிஜி,  தமிழக இளைஞர் நலன்-  விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பா. பாலகிருஷ்ணா ரெட்டி,   கன்னட நடிகர் துணியா விஜய்,   ஸ்ரீ கரியாள லிங்கேஸ்வர சுவாமி அறக்கட்டளையின் தலைவர் சிக்க நாகப்பா,   செயலர் கரியப்பா,  பொருளாளர் ருத்ராப்பா, துணைச் செயலர் நாராயணன்,  அறங்காவலர் சிக்கமுனியப்பா,  ஊர் பிரமுகர்கள் முரளி,  கேசவன்,  கேம்ராஜ்,  ரேவண்ணா, வி.எம்.எம்.கிருஷ்ணன், சந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் தமிழகம் மட்டுமின்றி,  கர்நாடகம்,  புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.