ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஒசூர் ஆவலப்பள்ளியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

ஒசூர் நகராட்சி 6-ஆவது வார்டு ஆவலப்பள்ளியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 9:21 am IST

ஒசூர் நகராட்சி 6-ஆவது வார்டு ஆவலப்பள்ளியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஒசூர் நகராட்சி ஆவலப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு காவேரியம்மன் கோயில் மற்றும் கங்கையம்மன் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயிலுகளுக்கு தினமும் பெண்கள், குழந்தைகள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் தொழில் நிறுவனங்களுக்கும், விவசாயக் கூலி வேலைக்கும் சென்று வருகின்றனர். 
புதிதாக திறக்க உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு அருகில் அரசு  மற்றும் தனியார் பள்ளியில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு டாஸ்மாக் கடை திறப்பதால் ஒட்டுமொத்த பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும், குடும்ப உறவுகள் சீர்கெடும். இதனால் அட்கோ காவல்துறையினருக்கும் கூடுதல் வேலை பளு ஏற்படும்.
இதனால் அரசு மீது பொதுமக்களுக்கு வெறுப்புணர்வு அதிகரிக்கும். எனவே, அமைதியாக வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் அரசு டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது எனவும் அதைக் கைவிட வேண்டும் எனவும் ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தை அந்தப் பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கோரிக்கை அடங்கிய மனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.