கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் 72 வது சுதந்திர தின விழா பள்ளிகள், அரசு அலுவலகங்களில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் செயல்அலுவலர் ம.மலர்மாறன்,தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். விழாவில் பேரூராட்சி அலுவலர்கள் செண்பகபாண்டியன், முரளி மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழியும், ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மாரிமுத்துவும் தேசிய கொடி ஏற்றினர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மாதப்பன் தலைமை வகித்தார். பிடிஏ தலைவர் சுவாமிநாதன் தேசியக் கொடியேற்றினார்.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் பரிமளம் தலைமையில் பிடிஏ தலைவர் தேவராசன் தேசிய கொடியேற்றினார்.
பா.நடுப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் சி.குப்புசாமி, காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் மாதேஸ்வரி தேசிய கொடியேற்றினர்.
ஊத்தங்கரை டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி அர்சுணன், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தேசிய கொடியேற்றினர்.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் மாரிமுத்துவும், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் சாமல்பட்டி சுன்னத்ஜமாத் கமிட்டி துணை தலைவர் உஸ்மானும் தேசிய கொடியேற்றி னர். கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி, ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் செ. ராஜேந்திரனும், மாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதசெல்வியும் கொடியேற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




