கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட மைய நூலகர் கோபால்சாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-2, ஆசிரியர் தகுதித் தேர்வு, போட்டித் தேர்வுகளுக்காந இலவச பயிற்சி வகுப்புகள் ஆக.18-ஆம் தேதி தொடங்குகின்றன. நவம்பர் 4-ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட மைய நூலகத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.
மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான 600 நூல்கள் இந்த நூலகத்தில் உள்ளன.
போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் ஆங்கில மாத இதழ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள் சொந்த நூல்களைக் கொண்டு வந்து படிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04343-236643 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9488638482 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் அவர் தெரிவித்தார்.