தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

திரையரங்கு உரிமையாளரை மிரட்டிய இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கைது

ஒசூரில் திரையரங்கு உரிமையாளரை மிரட்டி பணம் கேட்டதாகவும், கட்செவி அஞ்சல் மூலம் தவறான பதிவுகளை பல குழுக்களுக்குப்

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

ஒசூரில் திரையரங்கு உரிமையாளரை மிரட்டி பணம் கேட்டதாகவும், கட்செவி அஞ்சல் மூலம் தவறான பதிவுகளை பல குழுக்களுக்குப் பதிவேற்றம் செய்ததாகவும் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சீனிவாசனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் சீனிவாசன். இவர், ராயக்கோட்டையில் உள்ள தேர்ப்பேட்டை அருகே வசித்து வருகிறார்.
இவர், ஒசூரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள சினிமா திரையரங்கில் மிரட்டி பணம்  கேட்டதாக அதன் உரிமையாளர் கோபால் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ்குமாருக்கு புகார் அளித்தார். 
அது குறித்து விசாரணை நடத்த எஸ்.பி. மகேஷ்குமார் உத்தரவிட்டதின்பேரில் ஒசூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமணன் இதுகுறித்து சீனிவாசன் மற்றும் திரையரங்கு உரிமையாளர் கோபால் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் சீனிவாசன், திரையரங்கு உரிமையாளரிடம் மிரட்டி பணம் கேட்டத்துடன் அந்த திரையரங்கு குறித்து சமூக வளைதளங்களில் தவறான பதிவுகளை பதிவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சீனிவாசனை புதன்கிழமை இரவு போலீஸார் கைது செய்து ஒசூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.