வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

ஒகேனக்கல் குடிநீரை சீராக விநியோகிக்க வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் கூட்டு குடிநீரை சீராக விநியோகிக்க வேண்டும் என சூளகிரியில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Updated On :31 டிசம்பர் 2018, 8:27 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் கூட்டு குடிநீரை சீராக விநியோகிக்க வேண்டும் என சூளகிரியில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குள்பட்ட வேப்பனஅள்ளி தொகுதி தேமுதிக பொறுப்பாளர் அறிமுகம் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த நிர்வாகிகள் கூட்டம் சூளகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சூளகிரியில் தனியார் கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்குரைஞர் முருகேசன் தலைமை வகித்து பேசினார். 
மேற்கு மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலாளர் சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்து, விஜயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூளகிரி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். 
கூட்டத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் தமிழகம் திரும்ப வேண்டும். சூளகிரி வட்டத்தில்  நீதிமன்றம், சார் கருவூலம், அரசு அலுவலகங்கள் தொடங்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீரை விநியோக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு உறுப்பினர் கந்தசாமி, வேப்பனஅள்ளி தொகுதி பொறுப்பாளராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். ஒன்றியச் செயலாளர்கள் ஜீனூர் சங்கர்(வேப்பனபள்ளி), சீனிவாசன்(கெலமங்கலம்), வஜ்ஜிரவேல்(கிருஷ்ணகிரி) மற்றும் மாநில,மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து  கொண்டனர். முடிவில், சூளகிரி மேற்கு ஒன்றியச் செயலாளர் சீதாராமன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.