கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் கூட்டு குடிநீரை சீராக விநியோகிக்க வேண்டும் என சூளகிரியில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குள்பட்ட வேப்பனஅள்ளி தொகுதி தேமுதிக பொறுப்பாளர் அறிமுகம் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த நிர்வாகிகள் கூட்டம் சூளகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சூளகிரியில் தனியார் கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்குரைஞர் முருகேசன் தலைமை வகித்து பேசினார்.
மேற்கு மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலாளர் சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்து, விஜயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூளகிரி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் தமிழகம் திரும்ப வேண்டும். சூளகிரி வட்டத்தில் நீதிமன்றம், சார் கருவூலம், அரசு அலுவலகங்கள் தொடங்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீரை விநியோக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு உறுப்பினர் கந்தசாமி, வேப்பனஅள்ளி தொகுதி பொறுப்பாளராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். ஒன்றியச் செயலாளர்கள் ஜீனூர் சங்கர்(வேப்பனபள்ளி), சீனிவாசன்(கெலமங்கலம்), வஜ்ஜிரவேல்(கிருஷ்ணகிரி) மற்றும் மாநில,மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில், சூளகிரி மேற்கு ஒன்றியச் செயலாளர் சீதாராமன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு, பகலாக சுத்தம் செய்யும் பணி! ஜந்தர் மந்தரில் 60 டன் குப்பைகள்!

பிறந்த மாதத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருக்கா? | அறிவியல் ஆயிரம்

நெட்பிளிக்ஸில் முதல் இடம் பிடித்த கான் சிட்டி திரைப்படம்!

அந்த ஒருவரால் நாடு சீரழிந்தது... பதிவைப் பகிர்ந்த நடிகை ஜோதிகா!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


