ஒசூர் தனியார் தொழிற்சாலையில் ரூ.90 லட்சம் முறைகேடு
ஒசூர் முதலாவது சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் ரூ.90 லட்சம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவன நிதி மேலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.


ஒசூர் முதலாவது சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் ரூ.90 லட்சம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவன நிதி மேலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஒசூர் முதலாவது சிப்காட்டில் சூசூவாடியில் நான்கு சக்கர வாகனங்களை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கல்யாண் (50) மனித வளத் துறை மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒசூர் சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசலு (37) எங்கள் நிறுவனத்தில் நிதி மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 1.4.2017 முதல் 31.12.2017 வரையில் எங்கள் நிறுவன கணக்குகளை சரி பார்த்த போது ரூ.90 லட்சத்து 70 ஆயிரத்து 772 தொகை முறைகேடாக மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பேரில் ஒசூர் சிப்காட் போலீஸார் விசாரித்து மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சீனிவாசலு மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...