தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெண்களின் சிறப்பை சிந்திக்க பாரதியை தூண்டியவர் சகோதரி நிவேதிதை!

பெண்களின் சிறப்பை சிந்திக்க பாரதியைத் தூண்டியவர் சகோதரி நிவேதிதை என கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சகோதரி நிவேதிதை ரத யாத்திரையில் கம்பன் கழக செயற்குழு உறுப்பினர் வாசுகி கண்ணப்பன் பேசினார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 12:03 am

DIN

பெண்களின் சிறப்பை சிந்திக்க பாரதியைத் தூண்டியவர் சகோதரி நிவேதிதை என கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சகோதரி நிவேதிதை ரத யாத்திரையில் கம்பன் கழக செயற்குழு உறுப்பினர் வாசுகி கண்ணப்பன் பேசினார்.
கிருஷ்ணகிரிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த சகோதரி நிவேதிதையின் ரத யாத்திரைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கிருஷ்ணகிரி ஜயப்பன் கோயில் அருகே நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சிவதாஸ், நகர்மன்ற முன்னாள் தலைவர் கே.ஆர்.சி. தங்கமுத்து, ஒருங்கிணைப்பாளர் வசந்தராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மங்கள இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற சொற்பொழில் கம்பன் கழக செயற்குழு உறுப்பினர் வாசுகி கண்ணப்பன் பேசியது:
பெண்களின் சிறப்பை சிந்திக்கும்படி பாரதியைத் தூண்டியவர் சகோதரி நிவேதிதை. பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். பெண்களுக்கு கல்வியும், அறிவும் அவசியம் என எடுத்துரைத்தார். மேலும், பெண்களை சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க ஊக்கமூட்டியவரும் சகோதரி நிவேதிதை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.