தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கிருஷ்ணகிரியில் தீக்குளித்த பெண் காவலர் சாவு

கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் காவலர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 3:08 am

DIN

கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் காவலர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்த தேன்மொழி(38). இவருக்கும், சத்திவேல் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஞானசாய்(5) என்ற மகன் உள்ளார். தேன்மொழி  திருப்பூர் நகர ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த தேன்மொழிக்கு,  பிரசவத்துக்காக கிருஷ்ணகிரி வந்தார். 
கடந்த மார்ச் 5-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை இரண்டு நாள்களில் உயிரிழந்ததால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். 
இந்த நிலையில், ஜூலை 3-ஆம் தேதி, தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், உயர் சிகிச்சைக்காக சேலம்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.