காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் 14-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். எனினும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் பரிசல் இயக்கப்படவில்லை. மேலும், அருவிகளில் குளிக்கவும் அனுமதிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”தவெக 3 மாதங்களாவது தாண்டுமா?” முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின்

மின்சார வாரியத்தின் பதவி உயர்வு குளறுபடி: திமுக குற்றச்சாட்டு

நான் சீட்டுக்காக விசிகவில் இருந்து வெளியே வரவில்லை: பனையூர் பாபு விளக்கம்





