வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அங்கன்வாடி பணி வழங்கக் கோரி ஆட்சியரிடம் பெண் மனு அளிப்பு

தகுதியற்றவருக்கு அங்கன்வாடி பணி வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.

Updated On :14 மே 2018, 9:20 pm

தகுதியற்றவருக்கு அங்கன்வாடி பணி வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஊத்தங்கரை, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அனித ô (33) அளித்த மனுவின் விவரம்: கணவரை இழந்த எனக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கூலித் தொழில் செய்யும் நான், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளேன். ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளை வாசிக்கவும், எழுதவும் தெரியும்.
இத்தகைய நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி குறு அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பித்து, அதற்கான நேர்காணலில் பங்கேற்றேன். அப்போது, வெங்கடதாம்பட்டி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி பணியானது விதவைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இதன்படி அந்தப் பணிக்கு நேர்காணலில் பங்கேற்றோரில் நான் மட்டுமே தகுதி பெற்றவள்.
இந்த நிலையில், தகுதி இல்லாத ஒருவருக்கு அந்தப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எனவே, கணவரை இழந்த எனக்கு, அந்தப் பணியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.