வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

போச்சம்பள்ளி அரசுப் பள்ளியில் உலக அறிவியல் தினம்

போச்சம்பள்ளி அரசுப் பள்ளியில் உலக அறிவியல் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.போச்சம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்க விநாடி- வினா போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்(பொறுப்பு) ஆனந்தி மாலா தலைமை வகித்தார். ஆசிரியர் நவீன்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வன்னியரசு வரவேற்றார். இந்தப் போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் 10 -ஆம் வரை மாணவிகள் 700- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 4 குழுக்களாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் முடிவில் ஆசிரியர் நவீன்குமார் பேசினார். மாணவிகளுக்கான சிறப்பு செய்முறை காட்சி, அறிவியல் விந்தைகள் குறித்த காணொலி மற்றும் விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Updated On :12 நவம்பர் 2018, 10:05 pm

போச்சம்பள்ளி அரசுப் பள்ளியில் உலக அறிவியல் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
போச்சம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்க விநாடி- வினா போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்(பொறுப்பு) ஆனந்தி மாலா தலைமை வகித்தார். ஆசிரியர் நவீன்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வன்னியரசு வரவேற்றார். இந்தப் போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் 10 -ஆம் வரை மாணவிகள் 700- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 4 குழுக்களாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் முடிவில் ஆசிரியர் நவீன்குமார் பேசினார். மாணவிகளுக்கான சிறப்பு செய்முறை காட்சி, அறிவியல் விந்தைகள் குறித்த காணொலி மற்றும் விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.