கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள திருவடைமருதூர் முன்னாள் எம்.எல்.ஏ. செ.ராமலிங்கம் முன்னிலையில் ஒசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் மக்களவைத் தேர்தல் பொறுப்பாளர் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மேற்கு மாவட்டச் செயலாளரும், தளி எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருவிடை மருதூர் முன்னாள் எம்.எல்.ஏ. செ.ராமலிங்கம் கலந்துகொண்டு பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பூத் கமிட்டியை வார்டு வாரியாக , ஊராட்சி வாரியாக மீண்டும் சரிபார்ப்பது, மக்களவைத் தேர்தலுக்கு தயாராக இருப்பது, திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு முதல் முறையாக வருகை தரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்துஆலோசனை நடைபெற்றது.
இதில் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. முருகன், மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், மாநில சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர் விஜயகுமார், துணைச் செயலாளர் தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுகுமாறன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எல்லோர மணி, நகர பொருளாளர் சென்னீரப்பா, மாவட்டப் பிரதிநிதி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக அரசு: உதயநிதி ஸ்டாலின்

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தடையின்றி மின் விநியோகம்: தலைமை பொறியாளா் ஆய்வு
மணியாச்சி அருகே இளைஞா் கொலையில் பெண் உள்பட 3 போ் கைது

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு சாகும் வரை சிறை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

