போச்சம்பள்ளி அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞரை நாகரசம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
போச்சம்பள்ளியை அடுத்த அகரம் அருகேயுள்ள செல்லம்பட்டி பிரிவு சாலையில் உள்ள தேநீர் கடையில் இருந்த முதியவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கத்தியைக் காட்டி பணம் பறித்தார்.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் பாரூர் காவல் ஆய்வாளர் தலைமையில் நாகரசம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராசன் மற்றும் போலீஸார் தீவிர தேடுதலுக்கு பிறகு பணம் பறித்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி காடையம்பட்டி வெள்ளப்பன் மகன் டியூக்அருள் என்கிற அருள்மணி(23) என்பதும், இவர் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் கத்தியைக் காட்டி இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
பின்னர் இவரிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம், ரூ. ஆயிரத்து ஐம்பது ரொக்கத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விக்னேஷ் ராஜா ஒரு ஜீனியஸ்... எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தனுஷ் பதிவு!
நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது!

சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா!

முதல்வர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

