ஹீலகம் ஏரிக்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேன்கனிக்கோட்டை வட்டம், கொப்பகரை ஊராட்சிக்கு உள்பட்ட கிராம மக்கள் அளித்த கோரிக்கை மனுவின் விவரம்:
கொப்பகரை ஊராட்சிக்கு உள்பட்ட செங்கோடசின்னஅள்ளி, சிங்காரப்பேட்டை, கள்ளுகான்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். இங்குள்ள ஹீலகம் ஏரியின் மூலம் 800 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரிக்கு பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காசிநாயக்கனஅள்ளி (கடவரஅள்ளி) அணையிலிருந்து காய்வாய் மூலம் நீர்
வருகிறது.
இத்தகைய நிலையில், சிலர், கால்வாயில் தடுப்பணைகள் அமைத்து, ஹீலகம் ஏரிக்கு தண்ணீர் வருவதைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனால், ஹீலகம் ஏரி வறண்டு, விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளது.
எனவே, ஹீலகம் ஏரிக்கு தடையில்லாமல் தண்ணீர் வர தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறாா்: திருமாவளவன் குற்றச்சாட்டு
ஐபிஎல்: கொல்கத்தா கேப்டன் ரஹானேவுக்கு அபராதம்!
திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்; அதனால்தான் வரவில்லை: அண்ணாமலை

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

