மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஐபிஎல்: கொல்கத்தா கேப்டன் ரஹானேவுக்கு அபராதம்!

ஐபிஎல் தொடரில் மெதுவாக ஓவர் வீசியதற்காக ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

ரஹானே. - படம்: எக்ஸ்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:06 am

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக கொல்கத்தா அணி கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபில் தொடருக்கான போட்டிகள் சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட 14 நகர்களில் நடைபெற்று வருகிறது.

நேற்றிரவு நடைபெற்ற லீக் சுற்றின் 22-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை அணி 192 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

ஐபிஎல் விதிகளின்படி நிர்ணயித்த நேரத்தைக் காட்டிலும் கூடுதலானதால், மெதுவாக ஓவர் வீசியதற்காக கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய சென்னை அணிக்கு இரண்டாவது வெற்றியாக அமைந்தது. இதுவரை இந்தத் தொடரில் வெற்றி பெறாத மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா அணி 5 போட்டிகளில் விளையாடி நான்கில் தோல்வி, ஒரு முடிவில்லை என்ற நிலையில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

முதல் வெற்றியைப் பெறும் முனைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா.

Summary

Kolkata Knight Riders (KKR) Captain Ajinkya Rahane has been fined Rs 12 lakh for maintaining a slow over-rate during its Indian Premier League (IPL) match against Chennai Super Kings (CSK) here.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.