பென்னாகரம் வட்ட ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் டிடி 188 வட்ட அரசு மேல்நிலை மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் பேரவை கூட்டத்துக்கு சங்கத் தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் லட்சுமணன், ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு சங்கத்தின் செயலாளர் மோகன்ராஜ் உறுப்பினர்களின் முன்னிலையில் ஆண்டறிக்கை வாசித்தார்.தொடர்ந்து லாபத் தொகையான ரூ.14 லட்சம் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதில் பென்னாகரம் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். லெனின் நன்றி தெரிவித்தார்.
சிட்லிங்கில் அக்.24-இல்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
அரூர், அக். 21 : சிட்லிங் மலை கிராமத்தில் புதன்கிழமை (அக். 24) மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.
அரூர் வட்டம், சிட்லிங்கில் நடைபெறும் இந்த முகாமில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி
தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். இந்த முகாமில், தருமபுரி மாவட்டத்தின் அனைத்து அரசுத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
எனவே, சிட்லிங் ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
கர டிரைலர் அறிவிப்பு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

