வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சுண்டம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா

கிருஷ்ணகிரியை  அடுத்த சுண்டம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :4 ஜூன் 2019, 8:55 am IST

கிருஷ்ணகிரியை  அடுத்த சுண்டம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுண்டம்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய தேர்த் திருவிழாவையொட்டி மே 28-ஆம் தேதி தருமபுரி மறைமாவட்ட முதன்மை குரு அம்புரோஸ் தலைமையில் திருப்பலி,  மறையுரை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 29-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரையில் சிறப்பு தவநாள் திருப்பலிகள் நடைபெற்றன. 
ஜூன் 2-ஆம் தேதி, புதுநன்மை,  உறுதிபூசுதல்  திருவிழா திருப்பலி ஆகியவை தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயாஸ் தலைமையில் நடைபெற்றது.  தொடர்ந்து, காவேரிப்பட்டணம் சாந்திமாதா ஆலய பங்குத்தந்தை தேவசகாயம் தலைமையில் கூட்டுப்பாடற் பலியும், புனிதரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெற்றன. ஜூன் 3-ஆம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.