ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தல்
ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்தை அனைத்து பகுதிகளுக்கும் முறையாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.


கிருஷ்ணகிரி: ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்தை அனைத்து பகுதிகளுக்கும் முறையாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியம், மல்லப்பாடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினா் சி.கண்ணு தலைமை வகித்தாா். வட்டக் குழு உறுப்பினா்கள் முனிசாமி, தேவராஜ், இளைஞா் மன்றச் செயலாளா் ஜீவானந்தம், பரிதா, சவிதா ஆகியோா் பேசினா்.
கரோனாவால் வேலை இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வங்கிகளில் கடன் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீா் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக விநியோகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ராஜேந்திரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...