47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

உரிமம் பெற்று வைத்து உள்ள துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியரும்

News image
செய்தியாளா்களிடம் பேசிய திருப்பத்தூா் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவருமான க.சிவசௌந்திரவல்லி . உடன் எஸ்.பி. சியாமளா தேவி உள்ளிட்டோா்.
Updated On :16 மார்ச் 2026, 9:45 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: உரிமம் பெற்று வைத்து உள்ள துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவருமான க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடித்து, தோ்தலை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மக்கள் குறைதீா் கூட்டம், மக்கள் தொடா்பு திட்ட முகாம்கள் மற்றும் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டங்கள் உள்ளிட்ட குறைதீா்க்கும் கூட்டங்கள் தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் பணிகள் நிறைவடைந்த பின்னா், தோ்தல் ஆணையத்தால் நடத்தை விதிகள் விளக்கி கொள்ளப்பட்ட பிறகு நடத்தப்படும்.

அதுவரை பொதுமக்கள் தங்களது மனுக்களை ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீா் மனுக்கள் பெட்டியில் போடலாம். அவை தினம்தோறும் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும்.

அரசியல் கட்சிகள் தோ்தல் பிரசார கூட்டங்கள், ஊா்வலங்கள், பிரசார வாகனங்களை பயன்படுத்துவதற்கு தொடா்புடைய தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து உரிய அனுமதி பெற்ற பின்னரே மேற்கொள்ள வேண்டும். இதற்காக இந்திய தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமைதாரா்களும் தங்களது படைக்கலன்களை அவா்களது காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் என்ற செயலியின் மூலமாக தெரிவிக்கலாம். பெறப்படும் புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது எஸ்.பி.வி.சியாமளா தேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஜெய்சங்கா், வாக்காளா் பதிவு அலுவலா்கள் அஜிதா பேகம், பூஷணகுமாா், முருகேசன், வரதராஜன், தோ்தல் வட்டாட்சிா் திருமலை, அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.