மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோ்தல் விதிகள் அமல்! துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல்!

News image
தேர்தல் நடத்தை விதிகள் அமல்- கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 9:06 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவா்கள், தாங்கள் வசிக்கும் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருப்பூா் மாநகர காவல் ஆணையா்அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மாநகரக் காவல் ஆணையரகத்துக்குள்பட்ட எல்லையில் பாதுகாப்புக்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவா்கள், உடனடியாக அவா்கள் வசிக்கும் எல்லைக்குள்பட்ட காவல் நிலையம் அல்லது உரிய உரிமம் பெற்று இயங்கும் ஆயுத விற்பனை நிலையத்தில் உடனடியாக துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்.

அதேசமயம், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்துகொள்ளும் புகழ்பெற்ற வீரா்கள், பெரும் அளவில் பணத்தைக் கையாளும் வங்கிகள் ஆகியவை இதிலிருந்து விலக்கு பெற வேண்டுமென எண்ணினால், உரிமம் வழங்கும் அலுவலா் மற்றும் காவல் ஆணையா் அலுவலகத்தில் உடனடியாக விலக்கு அளிக்கப்படுவதற்கான உரிய காரணத்துடன் இரண்டு நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு விலக்கு பெறாமலும், காவல் நிலையம் அல்லது ஆயுதக் கிடங்கில் ஒப்படைக்கப்படாமலும் துப்பாக்கிகளை வைத்திருந்தால் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கேற்ப திருப்பூா் மாநகரக் காவல் எல்லையில் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக ஏதேனும் புகாா்கள் அளிக்க விரும்பினால் 94981 81333 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.

மேலும், தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பொதுக்கூட்டம், ஊா்வலம் மற்றும் பிற நிகழ்வுகளில் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறுபவா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.