தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஊத்தங்கரையில் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 7:12 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நான்குமுனை சந்திப்பில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏ, ஐ.ஒய்.எப் ஒன்றிய தலைவர் பரதன் தலைமை வகித்தார். 

ஒன்றிய செயலாளர் மணிமாறன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் கபிலன், ஏ.ஐ.ஒய்.எப் துணைச் செயலாளர் சுபாஷ், சிபிஐ துணை செயலாளர்கள் ஜெயராமன், ஆறுமுகம், மாதர் சங்கம் ரஷ்யா பேகம், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளரும், சிபிஐ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் இரா.சேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெறு, மின்சார திருத்தச்சட்டம் 2020 வரைவு திரும்பப் பெறு, இந்திய நாட்டின் விவசாயத்தை கார்ப்பரேட் பெரும் முதலாளிகள் கொள்ளை அடிக்கின்றன வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2020 சட்டம் என்ற வகையில் விவசாயத்தை அழித்து தொழில் தொடங்க முயற்சிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை வெளியேற்று, குலக் கல்வி மற்றும் மொழிக் கல்வியை அனைத்து கல்வியை வியாபாரம் ஆக்குவது மாநில உரிமையையும் பறிக்கும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.