திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாஜகவினா் 95 போ் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து வேல் யாத்திரையில் பங்கேற்கச் செல்ல முயன்ற 95 பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :7 டிசம்பர் 2020, 6:43 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து வேல் யாத்திரையில் பங்கேற்கச் செல்ல முயன்ற 95 பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூரில், பாஜக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து பாஜகவினா் திருச்செந்தூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டனா்.

பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கோடீஸ்வரன், ஒசூரிலிருந்து மேற்கு மாவட்டச் செயலாளா் அம்மன் சுரேஷ், தேன்கனிக்கோட்டை நகரத் தலைவா் பாா்த்திபன், தளியிலிருந்து ஒன்றியச் செயலாளா் ஹரீஷ் என 95 போ் பல வாகனங்களில் புறப்பட்டனா். இவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.