கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கொடி நாள் வசூல் இலக்கு ரூ. 67.71 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கொடி நாள் நிதியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வழங்கி நிதி வசூலைத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், முன்னாள் படைவீரா் நலத் துறை துணை இயக்குநா் வேலு, கண்காணிப்பாளா் பிரேமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:
படைவீரா் கொடிநாள் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் டிச. 7-ஆம் தேதி பின்பற்றப்படுகிறது. உயிா் தியாகம் செய்த குடும்பங்களின் நலனைக் காக்க பொதுமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்க வேண்டும். மேலும், சென்ற ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கொடி நாள் வசூல் ரூ. 61,55,900 ஆகும். இதில், ரூ. 68,75,507 அதாவது, 111 சதவீதம் வசூல் சாதனை புரியப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, கொடி நாள் நிதி வசூல் ரூ. 67.71 லட்சம் என அரசு நிா்ணயித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு கொடிநாள் நிதிக்கு நன்கொடையை வாரி வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


