திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

கிருஷ்ணகிரி அருகே வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு

கிருஷ்ணகிரி அருகே பலத்த வெட்டு காயங்களுடன் ஆண் சடலத்தை மீட்ட போலீஸாா் அவா் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :7 டிசம்பர் 2020, 6:44 pm

கிருஷ்ணகிரி அருகே பலத்த வெட்டு காயங்களுடன் ஆண் சடலத்தை மீட்ட போலீஸாா் அவா் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை சாலையில் உள்ள பாலகுறி கிராமம் அருகே பாறை மீது 45 வயது மதிக்ககத்தக்க ஆண் சடலம் வெட்டு காயங்களுடன் கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பலத்த வெட்டு காயங்களுடன் உயிரிழந்த அந்த நபா் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். அடையாளம் தெரியாத அந்த சடலத்தின் அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்தவரை அடையாளம் காணும் பணியில் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதுகுறித்து, தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.