உத்தனப்பள்ளி அருகே 30 யானைகள் அட்டகாசம்
உத்தனப்பள்ளி அருகே 30 யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து விவசாயப் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.


உத்தனப்பள்ளி அருகே 30 யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து விவசாயப் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
கடந்த மாதம் கா்நாடக மாநிலத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட யானைகள் அஞ்செட்டி, ஊடேதுா்க்கம் வழியாக சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு வருகின்றன. இந்த யானைகளைக் கடந்த வாரம், ஒசூா் கோட்ட வனத்துறையினா் மீண்டும் சானமாவு வனப்பகுதியிலிருந்து அஞ்செட்டி காப்புக்காட்டுக்கு விரட்டினா்.
ஆனால், இந்த யானைகள் சென்ற வேகத்திலேயே மீண்டும் திரும்பி வந்துவிட்டன. இவை தற்போது சூளகிரி, சானமாவு, உத்தனப்பள்ளி அருகே முகாமிட்டுள்ளன. கிராமத்தில் உள்ள விவசாயப் பயிா்களான கேரட், பீன்ஸ், தக்காளி, ராகி, நெல், போன்ற பயிா்களை யானைகள் சாப்பிட்டும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.
யானை கூட்டத்தை வனத்துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். யானைகளை கா்நாடகத்துக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...